Sunday, June 30, 2013

chaithra
சின்சிரிப்பில் பூத்த சித்திரம் .
saranya
சந்தனமாய் செழிப்பாற்றும் செம்மை காடு.
neethu
நிற்காமல் ஓடும் நீரோடை .
nisha
நிமிடங்கள் பேசாத நிசப்தம் .
jiyona
சிரிப்பில் அழகென தெரியும் இயற்கை .
anumol
மேகத்தின் ,வெண்மையின் அழகு.
shruthi
இசையின் ஒற்றை கவிதை .
ashwini
அதிகாலையில் மலர்ந்த சூரிய பூ
saranya
சரணமோடு சிரிக்கும் செண்பக பூ .
anandhi
கவிதையில் மறைக்கப்பட்ட ஒரு வரி கவிதை .
kathikeyani
பால்விழியில் கண்ட கருவிழி.
yamuna
ஆற்றங்கரையின் அமைதி ராகம் .
ramya
தோழமையில் தோன்றம் புத்துயிர்.
vaanathi
வானத்தில் பேசும் எண்ணிக்கையில்லா நட்சத்திரம் .
anusha
அருவியென சங்கமிக்கும் நீர்குழல் .
gomathi
அள்ள குறையாத பேச்சு குவியல் .
sathya
வர்மம் மறைந்த களவாணி .
raihana
சிறப்பென பூத்தாடும் தாமரை பூ.
divya james
முழு நிலவின் அழகு ஒற்றை வரி காவியம் .
geona joseph
புஷ்பவனத்திலும் பூக்காத அரிய பூ .
anju lakshmi
அஞ்சாமல் நெஞ்சிலே ஜொலிக்கும் உள்ளம் .
nithya
நீர் குமிழியாக வலம் வரும் நீள்தாமரை .
roshna
பன்னிரெண்டில் ஒருமுறை பூக்கும் குறிஞ்சி.
raadhika
ரத்தினமாய் ஜொலித்திடும் நகைப்பின் சகோதரி .
archana
அர்த்தமில்லாத கவிதையும் சிறப்பாகும் கவிக்கரு .
adithi
தொலைவில் கணக்கிட முடியாத கடல்.
neethu
நிமிடங்கள் சொக்கிபோகும் இனிமை குழல்.
malavika
மறைந்தாடும் கற்பனையின் நினைவின் கனவு .
julia
மரக்கிளையில் மலரும் இளம் தளிர்.
suchithra
பேச்சில் இனிமை பெரும் பைங்கிளி .
nivedhitha
திடீரென பொழியும் மழை.
smrithi
அழகென மலரும் ஆங்கில மழை.
divya
பேசாமல் பேசும் ஆயிரம் கோடி விண்மீன்கள் .
aarthi
நட்புக்குள் பூக்கும் வண்ண வானவில்..
raagi
காலத்தில் மாற்றம் காணும் பருவம்.
neelima
சத்தமில்லா சிந்தனையின் துவக்கம்.
lines for our sis radhika......

மழையென பெய்து கொண்டிருக்கும் இவள் மீது ,
புதிதாக வானவில் ஒன்று சேர போகிறது.....
அதனை -நட்பின் வழியே 
பார்த்து ரசிக்க காத்திருக்கும் Brother sthanu and Alpha(1058/1059).....
few words about our batch............

NAVEEN 
நந்தவனமாக சுற்றும் நட்பு வட்டாரம் .
NIRMAL
 நிழல் தேடாத நட்பின் உல்லாசம்.
ARAVIND
 நட்பின் விதையாக மாறும் பொற்குவியல் .
SRINATH
 மேகமாய் போர்த்திய தோழமை வானம்.
JOSE

 சொல்லாமல் தோன்றிய அன்பின் நட்பு.
VIVEK

 மோட்சத்தின் அழகாக வலம் வரும் தோழன் .
VINOTH

 எவராலும் திருட முடியாத சொப்பனம் .
SUBIN

 ரோஜா பூவின் அமைதி புன்னகை .
JOSE JITHIN

 அழகான தூய்மையின் சொல்ல முடியாத ஓவியம் .
SUJITH

 சுழல் இல்லாத நட்பின் நீரோட்டம்.
RAKESH

 இயற்கையில் நுழைந்த கவர்ச்சியின் அழகு.
BOBIN

 செவ்வானம் போன்ற மாலையின் அழகு.
LINTO 

எங்கும் சுற்றி வரும் காற்றலையின் நட்பு.
TINJU

 பேச்சின் ஈர்ப்பாய் பொழியும் எங்கள் surya.
RAHUL

 கண் தெரியாத நட்பை நுழையும் காற்று.
JOVID

 மௌனத்தில் பேசும் நகைப்பு கவிதை
ROMY

 எங்கள் நட்பின் வட்டத்தில் சுற்றும் romeo.
SACHIN

 தோரணையாக தொடரும் நட்பு சங்கிலி.
JITHENDHRA

 பிரிவில்லாத நட்பின் கருவுயிர்.
SURAJ

 காண முடியாத கனல் நீரும் ,தெரியும் நட்பு.
HARMINDHAR

என்றும் நிற்காத கடலலையின் ஆர்ப்பறிப்பு .
PIRITHVI

 நட்புக்கே மெருகேற்றும் ,கவிதையின் ரகசியம்.
NAKUL

 என்றும் ஜொலிக்கும் திங்கள்.
நான்கு வருடங்களாய் 
எழுதப்பட்ட எங்கள் நட்பின் கடிதம் 
இன்று நினைவுகளால் ஒட்டப்பட்டு 
வாழ்வென்ற முள் வழி பாதையில் 
பயணிக்க போகிறது.........................



கல்லூரியில் ,
தேடி கண்டெடுத்த சிற்பி முத்துக்கள் 
என்
நண்பர்கள் .......................

--
நினைவுகள் அதிகம்.ஆனால்,
நாட்கள் குறைவு.
இன்பங்கள் அதிகம் -ஆனால்,
நிமிடங்கள் குறைவு.
வாழ்வின் செழிப்பு அதிகம்.-ஆனால்,
வினாடிகள் குறைவு...............
***நம் நட்பிலே ****



கல்லூரியை விட்டு
நமது கனவுப்பூக்கள் உதிர்ந்தாலும்,
நினைவென்ற நம் நம் நட்பு வாசம்,
ஒவ்வொருவர் மனங்களிலும் ,
தினந்தோறும்
பூ பூத்து கொண்டிருக்கும்.



முதல் வருடத்தில்,
பூத்த நமது கனவுப்பூக்கள் ,
இன்று வாசமாய்,
நினைவுகளை மட்டும் வீசி
ஓரிரு மாதங்களில்
கல்லூரி விட்டு உதிர போகிறது.
--


உள்ளம் உறவாடும் உண்மை அன்பின் காதல் உறவு *** நட்பு ***



ஒற்றை வேலி தோட்டத்தில்
அடைபட்டு இருந்தாலும் ,
வெவ்வேறு பூவின் வாசமாக
வீசிய அக்காலம் சென்று ,
நட்பு தோட்ட பூக்களின்
மணமாக வீச தொடங்கி இருக்கிறோம் இன்று
கல்லூரியில்...................
...

நினைவுகள் பேசும் காதல் உணர்வு
எங்கள் நட்பு.
தடங்கல்கள் இன்றி குழையும் உள்ளம்
எங்கள் நட்பு.
தீராத பகைமையும் ,எங்கள் நட்பில் தீர்ந்திடும்.
பேசாத மனங்களும் எங்கள் அன்பில் கரைந்திடும்.
தீராத பகைமையும் ,எங்கள் நட்பில் தீர்ந்திடும்.
பேசாத மனங்களும் எங்கள் அன்பில் கரைந்திடும்.
நண்பனே....
நினைவில் தேடும் என் நண்பனே....
பொன்மலர் ,
தூவும் வாழ்வின் நண்பனே.
இயற்கை ரசித்த நட்பின் ஓவியம்
நாம் தான் என்பதா.
வானம் கண்டு வியக்கும் நிலவு
நம் நட்பு என்பதா.
கால்கள் தடம் மாறி பிரிந்தாலும்,
செல்லும் இடம் என்றும் மாறாது.
நம் நட்பு எங்கேயும் பிரிந்தாலும்
உருவம் அழிந்து என்றும் சாகாது.நினைவுகள் பேசும் காதல் உணர்வு
எங்கள் நட்பு.
தடங்கல்கள் இன்றி குழையும் உள்ளம்
எங்கள் நட்பு.



,,,,,,,,நட்பு என்னும் மணம் கமழும் கல்லூரி என்ற பூந்தோட்டம்
நம் வாழ்வில் என்றும் மறவா தேரோட்டம்
கல்லூரி என்ற நட்பின் மலர்களில்
வசிக்கும் நண்பர்களின் மென்மை வாசம் தான் நட்பு
அன்பு என்ற செடியில் ,நட்பின் கிளைகளில்
வசிக்கும் நண்பர்கள் என்றும் உதிரா பூக்கள்
இங்கு ,
நண்பர்களின் பகிர்வு தன்மை
என்றும் அழியா ஓவியம் போல ,
கண் தெரியா இளந்தென்றல் கூட
நட்பை சுவாசிக்க ஆசை கொள்ளும்
இந்த நந்தவன கல்லூரி என் வாழ்வில்
என்றும் அழியா கல்வெட்டு போல ,,,,,,,,,,,,



*விரல்களின் இடைவெளிகள் போலவே
நண்பர்களின் பிரிவுகள் -ஒருபோதும்
நம் உறவை விட்டு விலகாது ***



***உணர்வுகளை மதிக்க தெரிந்த உறவுகளுக்கு மட்டுமே மதிப்பு அதிகம் ....அது போலவே நேசிக்க
தெரிந்த மனிதனுக்கு மட்டுமே பாசம் அதிகம் ***



**அன்பென்ற மூன்றெழுத்தை கருவாக கொண்டு உருவாகியதே நட்பென்ற உயிரெழுத்து **
என் தோழி வந்தாய் நீ..
உயிர் முத்தம் தந்தாய் நீ .
சொப்பனம் போலே வந்து ,
உயிர் கொண்டு சென்றாய் நீ.
விழிமேலே தொட்டி நீ.
உயிர் மேலே நின்றாய் நீ.
கனா போல வாழ்வில் வந்து ,
எனை திருடி சென்றாய் நீ.
தேன்நிலா போலே வா வா ,
அன்பே என்னை கொள்ளாதே.............
உயிர் காதல் கொண்டே தா தா ,
நிலா என்னை கிள்ளாதே....
காதல் தான் உனக்குமே
பெண்ணே நீ வா வா ...
என்னை உரசி சென்றே தானே.....
உயிர் கொஞ்சம் தா தா ......
காதல் தான் உனக்குமே
பெண்ணே நீ வா வா ...
என்னை உரசி சென்றே தானே.....
உயிர் கொஞ்சம் தா தா ..
என் தோழி வந்தாய் நீ..
உயிர் முத்தம் தந்தாய் நீ .
சொப்பனம் போலே வந்து ,
உயிர் கொண்டு சென்றாய் நீ.
விழிமேலே தொட்டி நீ.
உயிர் மேலே நின்றாய் நீ.
கனா போல வாழ்வில் வந்து ,
எனை திருடி சென்றாய் நீ.
என் காதல் உனக்காக தானே....
வழிவிழியில் நிற்குது.
உயிர் என்று சொல்லி தானே
உன்னை காண துடிக்குது...
வாழ்க்கையும் என் காதலும் ஒன்று சேர்கிறதா.....
போட்டி போட்டு உன்னை அழைத்து ,
தோழி என்றே வெல்கிறதே.....
உன்னை காணும் போது தானே
என்னை என்னில் கானுமடி.
என்னை தேடி கண்ட பின்னே
கண்கள் உன்னை தேடுதடி....
என்,
கண்கள் உன்னை தேடுதடி.......
என் கண்ணில் பதிந்த

கல்லூரி நண்பர்களே..............

உறவுகள் பொய்த்தாலும் ,

நம் நட்புக்கள் என்றும் பொய்க்காது.

தூரம் நம்மில் பெரிதல்ல

தோழனே.................

புன்னகை என்ற புத்தகத்தில்

அன்பின் அழியா பூவாக திகழ்வோம்.

நினைவுகள் நம் பக்கம் வாழ்ந்திட

ஒருவர் நெஞ்சில் ஒருவர்

என்றும் வாழ்ந்திடுவோம்

காலம் அழியாத நட்பின்

உதிரா பூக்களாக.........................
கனா போல வாழாதே.....
நிலா போல நடிக்காதே.....
கனா போல வாழாதே.....
நிலா போல நடிக்காதே.....
சின்ன சின்ன ஓவியம் வரைந்து 
கையில் ஏந்தி செல்லாதே....
இருள் போல இருக்காதே...
மழை போல பொழியாதே...
கண்கள் பார்த்து காதல் வந்து 
உயிர் கொண்டு செல்லாதே....
நட்சத்திரம் காணும் போது அழகிங்கு உள்ளதடி....
நிலா பெண்ணே உன்னை தேடி நீயும் அங்கே இல்லையடி....
காரணம் என்னவோ மறைந்து கொள்ளாதே....
உண்மையே பேசிடு பொய்கள் தூற்றாதே.....
இதயம் கடன் கேட்கும் போது ,காதல் அங்கு உள்ளதடி....
நீயும் என்னில் பிரியும் போது ,உயிரும் அங்கே மறையுதடி....
தோழியே ........
உண்மையாய் என்னிடம் வந்து விடு.
இல்லையேல் ,
என்னையே மண்ணிலே பிரித்துவிடு.
கனா போல வாழாதே.....
நிலா போல நடிக்காதே.....
கனா போல வாழாதே.....
நிலா போல நடிக்காதே.....
சின்ன சின்ன ஓவியம் வரைந்து
கையில் ஏந்தி செல்லாதே....
இருள் போல இருக்காதே...
மழை போல பொழியாதே...
கண்கள் பார்த்து காதல் வந்து
உயிர் கொண்டு செல்லாதே....
தாய் பிள்ளை போற்றும் போது தாய்மை அங்கு வாழுதடி.
அதே பிள்ளை விரட்டும் போது பாசம் அன்பே மடியுதடி......
இந்த தாய்மை கொண்ட காதல் தானே,
என்னை உன்னில் இழுக்குதடி.....
காந்தம் போல உந்தன் காதலும் ,
என்னில் வந்து ஒட்டுதடி.......
FRIENDSHIP

உண்மையற்ற
உறவின் பொய்மைகள் 
நட்பில் என்றும் நிலையாகாது ...........


Thozhamai thedaatha ullam,
Intha Ulagil irukka mudiyathu...
Athupola,
Natpin adivaarathil than ,
anaithu nesa pasangal pirakkirathu........

Friendship s d base for all relationship.......

வெண்மை நிலவாய் 
செழித்த வாழ்வின் பெருமை 
எங்கள் நட்பு 

கண்மூடிய தருணத்திலும் 
தொடரும் புனித உறவு 
எங்கள் கல்லூரி நட்பு

சிரிப்பில் சந்தோசமாகவும்
அழுவில் துன்பமாகவும்
எனக்காக துடிக்கும் உறவு
** நட்பு **

மரணமென்ற முடிவு துரத்தினாலும்
அதிலும் துணை நிற்பவன்
என் நட்பு மட்டுமே..........

கள்ளி செடி போக்கையும்
வளமிக்க வயல்வெளியாக
மாற்ற நட்புக்கே வலிமையுண்டு....

புனிதம் தந்த
பூமழை தூவும்
அகல் விளக்கு எங்கள் நட்பு.

மலரில் வசிக்கும்
தேன் போல தான்,
நானும் எங்கள் நண்பர்களும்..

அழகுள்ள பூக்கள் தான்
நாங்களும் இந்த கல்லூரியில் ...

செம்மழை பொழியும் எங்கள் நட்பில்
நினைவுகளும் உரிமைகளும்
ஒன்றுக்கொன்று பிணைந்தவை.

கிளி வண்ணம் மயக்கா சிலர்
எங்கள் நட்பில் வீழ்ந்தனர்.

சின்ன மலராய் சித்தரித்து
இன்று,
வாசம் வீசும் பெருமலரே
எங்கள் நட்பு.

மலையோரம் வீசும் காற்று
நம்மிடையே
நட்பை கடன் கேட்கிறது.

தாமரை வண்ணமாய்
கல்லூரி குளத்தில்
பூத்திருக்கும் நங்கள் தான்
நட்பினுள் உள்ள பெருமை .

நட்பென்ற நிலவில்
கரும்புள்ளிகள் இருந்தாலும்,
என்றும் சிறகடிக்கும்
வண்ணமிக்க பறைவைகள் தான் நாங்கள்.

மனமென்ற கூண்டில்
இனமென்ற ஒன்றை விடுத்து
குணமென்ற புதையல் வைத்து
உயிரில் சிறப்பதே நட்பு....

சித்தரிக்கப்பட்ட
ஓவியம் போல இல்லாமல்
இயற்கை தந்த
அன்பின் ஓவியம் தான் நட்பு.

புன்னகை ஒருபுறம்
சோகம் மறுபுறம்
மாறி மாறி அடித்தாலும்
நேசத்தின் வாழ்வோடை
என்றும் நட்பு தான்.

கவிதையாலும் ,
வர்ணிக்க முடியாத
நிழல் செதுக்கிய
ஓவியம் தான் நட்பு.

பௌர்ணமி வானமாய்
ஒவ்வொரு நாளாய்
ஒளி திகழும் வாழ்வு தான்
உயிர் மறவா நட்பு.

பிடிக்கையில் கைகள் குத்தினாலும்
வாசத்தில்,
அனைவர் மனம் கமழும்
ரோஜா தான் நட்பு.

கவிதையை ,
அனைவராலும் எழுத முடியும்.
ஆனால் நட்பை
உண்மை உள்ளவர்களால்
மட்டுமே வாசிக்க முடியும்.

கருவிழி மேகமாய்
ஒவ்வொரு நாளும் பிரதிபலிக்கும்
கள்ளமிக்க காதல் தான் நட்பு....

வண்ணம் செழித்த
வாழ்வின் அடையாளம் தான்
உண்மை நட்பு...

அம்மாவிற்கும் பிள்ளைக்கும்
உள்ள காதல் கூட
ஒரு வகை நட்பு தான்

மறைப்பில்லா நட்பில்தான்
உண்மை
என்ற வாசகம் எழுத படுகிறது.

நிலை தவறும் சிலரும்
நட்பை கையாண்டு தான்
உலகம் காண்கிறார்கள் .

ஒவ்வொரு பருவத்திலும்
ஒவ்வொரு நட்பு பூண்டாலும்
நெஞ்சில் பதிவது தான் மறக்கா நட்பு.

காதல் சிலரை அடிமையாக்கும்.
ஆனால் .
நட்பு அந்த சிலரையும் தலைவனாக்கும்.

வண்ணமுலாம்
பூசிய தகடுகள் தான் நாங்கள்
நட்பில் ஜொலிக்கும் வரை.

இன்பம் தடவிய எங்கள் நட்பு
துன்பத்திலும்
சிரிப்பை பூண்டு கைகோர்க்கும்,

ஒவ்வொரு நண்பனின்
இதயம் வடித்த கவிதை தான்
உண்மை காதல் நட்பு.

நண்பன் முகம் காணாமல்
அவன் இதயம் வாசிக்கும்
நேசம் தான் நட்பு .

சுழன்றடிக்கும்
புயல் காற்று கூட
நட்பின் வலிமையை
தகர்க்க முடியாமல் முழிக்கிறது,

அசைந்தாடும் காற்றினில்
கீதம் படிக்கும்
மிகை இதம் நட்பு.

முக்கனி சுவைகளையும்
மூன்றெழுத்தில்,
அடக்கிய ஒருகனி நட்பு.

திசைகள் எட்டிலும்
முதலிடம் பெரும் உறவு
நட்பென்ற உன்னதம்.

தமிழில்
5 காப்பியங்கள் உருவாக்கப்பட
அதனை எழுத உதவிய
கவிதையே
நட்பின் ஆறாவது காப்பியம் .

ஆறு வகை சுவைகளாய்
பேச்சினில் ருசிக்கும்
அன்பின் சுவை நட்பு.

வண்ணங்கள்
வெவ்வேறாக இருந்தாலும்
அழகில் ஜொலிக்கும்
வானவில் ஒன்று தான்.
அதுபோல தான் நட்பும்.

கொய்யா கனியில்
விதைகள் போல தான்
ஒவ்வொரு இடத்திலும்
நங்கள் நிறைந்திருப்போம்.

சூரிய ஒளியின்
பிரகாசம் போல தான்
எங்கள் நட்பும்.

வண்ணமிக்க நிலவில் தான்
குடி வாழ்கிறோம் நாங்களும்
உண்மை நண்பர்களாக.

உலகத்தை
சுழற்றுவித்து கொண்டிருக்கும்
சக்கரம் நட்பு தான்.

வண்ணம் பூசிய
அழகு பூசிகள் நாங்கள்
நட்பில் பறந்து கொண்டிருக்கும் வரை,

விண்மீன் ஜொலிக்கும்
விண்வெளி போல தான்
எங்கள் கல்லூரியும்.

மழலை கொஞ்சும்
குழந்தை முகம் தான்
உண்மை நட்பின் ஆரம்பம்...

வானம் போர்த்திய
வென்னாடையில்
புதைந்துள்ள மழை தான்
எங்களின் நட்பு.

நட்பில்
ரோஜாவும் நாங்கள் தான்
முட்களும் நாங்கள் தான்.

எண்ண முடியாத
விண்மீன்கள் போலவே
நட்பில் நாங்களும்.

வானமென்ற வாசகத்தில்
நட்சத்திரங்களாக
பொறிக்கப்பட்ட பொன்னேழுதுக்கள்
நண்பர்கள்.

மல்லிகை வாசமாக
பரவிய எங்கள் நட்பு
என்றும்
அனைவரையும் கவர்ந்து தான் இருக்கும்.

அழகின் ஓரம் செதுக்கிய
பசுமை புல்வெளியாக
ஒவ்வொரு முறையும் காட்சியளிக்கிறது
எங்கள் நட்பு.

கண் திறந்தும்
கண் மூடியும்
நேசிக்கும் ஒரே உறவு நட்பு.

கவிதைகள்
பலவாறு எழுத பட்டாலும்
உண்மை நட்பை
நேசிப்பதால் தான் புரிந்து கொள்ள முடியும்.

தளிராக
தழைப்பது தான் நட்பு,
சருகாக
வீழ்வது அல்ல.

அரட்டை அடிக்கும்
எங்கள் சப்தமும்
நட்பில்
ஒரு இசை தான்.

இயற்கை
உயிரை பறித்து சென்றாலும்
நினைவுகள்
நட்பில் தான் சுழல்கிறது.

கனவில்
ஒன்றாய் வாழ்கிறோம்.
நினைவில்
மட்டும் பிரிகிறோம்
நட்பிலே.........

ஒரு பூவின் அழகையும்
நட்பின் அழகையும்
ரசிப்பது ஒன்றே.

சூரியன்
சுடரை இழந்து
இரவின் நிலவாய்
எங்கள் நட்பு காண
காத்து கொண்டிருக்கிறது.

விரிவுரை கண்ட
எழுத்தாளனும்
ஒவ்வொரு நாளும் ஆச்சர்ய படுவான்
நட்பை கண்டு

நட்பின் பினைப்பின்றி
இந்த உலகின்
ஒரு உயிரினமும் கிடையாது,

பிழைகள் தவறாயினும்
மன்னிப்பு கோராமல்
ஏற்று கொள்வதே நட்பு

இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிலும்
வாசிக்க படும் உயிரெழுத்து
நண்பன் மட்டுமே......

உலகம் இருண்டாலும்
எங்கள் நட்பின் வட்டத்தில் மட்டும்
வெளிச்சம் வீசி கொண்டே இருக்கிறது..

எனக்கும் உனக்கும்
எந்த வித சொந்தமும் இல்லை
எதற்கு எனக்காக உயிரை தருகிறாய்
நட்பென்ற காதல் தானே...

நடமாடும் தெய்வம்
அம்மா என தெரிந்து கொண்டால்
உள்ளுக்குள் உள்ள தெய்வம்
நண்பன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .....
Dedicatted to true lovers


அன்பின் விளக்காய் ஏற்றி ,
காதலில் ஒன்றாய் வாழ்வோம்
காதல் மொட்டில் பூத்து,
உலகம் கண்டு செல்வோம்
உன்னை கண்ட நெஞ்சம்
காற்றின் கவிதை போல
என்னை கொஞ்சம் கொஞ்சம்
தூக்கி லாரி செல்லுதடி.
பரிதவித்த என் உள்ளம்
கடவுள் கண்ட உலகம் போல
அளவில் என்னை ஏற்றித்தான்
சந்தோஷத்தில் அள்ளுதடி.
பூவே..... பூவே எங்கள் காதல்
என்றும் என்றும் உன்னை போல.
சொந்தம் பந்தம் நம்மின் முன்னே
என்றும் இல்லா உண்மை போலே.
( பூவே........)
( அன்பின் விளக்காய்....)
காதல்..... காதல்..... எங்கள் உள்ளே
நெஞ்சம் கூறும் அன்பை போல.
வாழ்வும் தாழ்வும் எங்கள் கண்ணில்
ஒன்றும் இல்லா தன்மை போலே.
மண்ணில் மரமாய் பூத்து,
நிழலை ஒன்றாய் புரிவோம்.
தேடல் போல பாய்ந்து,
உலகில் நம்மை வெல்வோம்.
காணும் போது கண்கள்
கட்டவிழ்த்த மீனாக
எல்லார் முன்னும் அழகாய்த்தான்
காதல் ஏற்றி துள்ளுதடி.
உலகில் உள்ள காதலும்
நம்மை சுற்றி வந்துதான்
உண்மை காதல் ஏற்கவே
உள்ளம் அழகாய் ஏங்குதடி....................................
( பூவே........)
( காதல்......)
நட்பு சாரல் 


ஆசைகள் எல்லாம் பொக்கிஷங்கள்....
கனவுகள் எல்லாம் கவித்துளிகள்.......
உன் நட்பு பூ மழையில் ..............................
சுற்றங்கள் ஏதும் இன்றி ,
காணா இதயம் ஒன்றே சேரும் ,
உன் சொர்க்க கருவறையில்......
தாய்மையும் நட்பு தான்,
கடவுள் தேடலும் நட்பு தான் .
உண்மைகள் நேசம் புரியும் ,
வாழ்வின் காதல் சாரலும் நீ தான்....................
இயற்கை :::


என் கண்ணீரை 
உங்கள் மீது 
அருவியாக குதிக்க செய்கிறேன்.
என் உயிரெனும் சுவாசத்தை
உங்களுக்காக பகிர்ந்தளிக்கிறேன்....
நீராக நெருப்பாக ,
மழையாக வெயிலாக ,
இதமாக சுவாசமாக ,
ஒவ்வொரு கணமும் 
உங்களுக்காக வாழ்கிறேன்.
ஆனால் ,
என்னை மட்டும்
ஏன் காயப்படுதுகிறிர்கள்..............
மழை :::


பறந்து கொண்டிருக்கும் மேகமும் 
நிலை வாழும் பூமியும் 
ஒன்றையொன்று நேசம் செய்கிறதோ ......
என்னவோ?///////////
மழையாகிய ,
என்னை தூது விட்டு கொள்கிறார்கள்.
வெண்மை பொட்டாய்
நிலமெனும் இவள்மீது பதிந்து 
அவள் அழகை வியப்பிக்கிறேன்.
கடவுள் எனக்கு கொடுத்த
வராம என்று தெரியவில்லை ...........
என் மனம் எப்படி இருந்தாலும்
குணம் கூறும் என் நிறம் ஒன்று தான்................
********************** வெண்மை ************************
பத்து மாதங்களாக ஏங்கி கொண்டிருந்தேன் 
இவளது இதய முத்தங்களுக்காக...........
இன்று யாராலும் வர்ணிக்க முடியாத ,
காதல் மலர்களாக என் நெற்றியில் படர 
ஆனந்த மையமிட்டு கொள்கிறேன்.............
my cute amma
வானம்:::::::::::


வெள்ளை நீலமாய்
மாறி மாறி வியப்பூட்டி 
அனைவர் காணும் 
கடவுளின் ஓர் அதிசயம் நான்.
என் மேகங்கள் 
உன் கண்களுக்காக மாறுகின்றதோ ....
என்னவோ ?//////////
என்னை அடிக்கடி மாற்றி 
உன்னை என்வசம் ஈர்கிறேன்...........

கண்கள் கண்கள் பார்த்து கொண்டது.
விழிகள் மாறி பேசி கொண்டது.
காதல் என்ற ஒற்றை வரியில் 
ஒன்றாய் இணைந்தோம் தோழி......
நெஞ்சம் என்ற காதல் உறையில் ,
சேர்ந்தே வாழ்வோம் தோழி......
ஒவ்வொரு நிமிடம் உன்னை காண்கிறேன்...
பேசும் நொடிகள் அன்பை கேட்கிறேன்.....
நீயே எந்தன் மேன்மை தோழி ,
என்றும் காண்போம் வாழ்வின் உண்மை தோழி.......