Sunday, June 5, 2011

விண்ணை காட்டி என்னை ஊட்டி வளர்த்தவள் ,
***தேடுகின்ற ஊஞ்சலில்
கதைகள் சொல்லும் வெண்ணிலா
பாடுகின்ற பாட்டினில்
கவிதை சொல்லும் பெண்ணிலா
பரவுகின்ற காற்றினில்
காதல் சொல்லும் தேன்நிலா
காதல் சொல்லும் பார்வையில்
***என் கண்ணில் கருவிழியாக மலர்ந்த அவளுக்கு என் கண்ணிமைகள் கொண்டு பாதுகாத்தேன்.ஆனால் ,அவளோ என்னை காயபடுத்தி கண்களை விட்டு வெளியேறினாள் கண்ணீராக ***

en kadhali

என் இனிய அவளின் உள்ளத்திற்கு ,
****இயற்கையின் தோல்வி****

உன் ஈடிணையற்ற முகத்திற்கு
என் ஓரிரு வரிகளை
சமர்பிக்கின்றேன் கவியாக,
வானத்தின் பொட்டுக்கள்
உந்தன் முகத்தில்
ஜொலிக்க ஆசை கொள்கின்றன.
கடலின் தழுவல்கள்
உந்தன் அங்கம்
அணைக்க ஓடி வருகின்றன.
ஆகாய மேகங்கள்
உன்னை வரைய
போட்டி போட்டு கொள்கின்றன'
காற்றின் அசைவுகள்
உன் கூந்தல் தடவ
வீச கற்று கொள்கின்றன.
மணம் கமழும் பூக்கள்
உன் கூந்தலில் வசிக்க
இடம் கண்டு எடுக்கின்றன
விண்ணை ஆளும்
திங்களும் ஆதவனும்
உன் கண்களில் மலர முனைகின்றன .
நினைவுகளும் கனவுகளும்
உன்னை அடைய
மாறி மாறி வினவுகின்றன
மகிழ்விக்க தெரியாத
புயல் வெள்ளமும்
உனக்காக
தன் நிலை மாறுகின்றன
உயிரற்ற அபாய கருவிகள் கூட
உனக்காக
தன் குணத்தை மாற்றி கொள்கின்றன
தன் நிலைநோக்கி ஓடுகின்ற பொய்கையும்
உன் பேச்சை கேட்டு
பின்னால் விரைய முன்வருகின்றன
மறைந்து போன என் காதல் நினைவுகளும்
உன் குரல் கேட்டு
தன்னை வெளிகாட்டிகொள்ள தயாராகின்றன
சுற்றிருக்கும் மரங்கள் கூட
உன் வருகையை நோக்கி
சப்தம் எழுப்பி வரவேற்கின்றன
மிகைப்படுத்த முடியா
இந்த இயற்கையே -உன்னை
பல முறைகளில் காதலித்தாலும்
நீ என்னை மட்டும் விரும்புவது
ஏனடி ?
பதில் நீ மறந்தால்,
அடுத்த கவிதையில் உன் பதிலை
நான் கவியாக வரைகின்றேன்

anbin ninaivu

**வானத்தில் பூத்த வான்மதியே ,
காற்றில் பரவியிருக்கும்
என் காதலை
சுவாசித்து பார் ***


*****வானத்தின் போர்வையில் பதிந்த
நட்சத்திரங்கள் போல
என் நினைவுகளை,
உன்னில் பதிக்கிக்றேன்.
காற்றில் கரைந்து போன
என் நினைவுகளை,
மீண்டும் ஒருசேர
உன்னில் சுவாசமாக நுழைக்கிறேன்
இருந்தாலும் பயனில்லை,
காரணம் நீ அறிவாய்-என்னால்
முடியவில்லை உன்னை அறிய****

kadhal nilavu

*** பிழையென கண்ட அந்த நிலா
அருகினில் வா வா என்னை கொஞ்ச
அழகென கண்டேன் அவளையே
அன்பே வா வா எனக்குள்ள ***

thozhiyin ninaivu

*** இரவின் பிடியில் சிக்கிக்கொண்ட
அந்த திங்கள் நிலா,
இன்று காலை
மேடையில் அரங்கேறக் கண்டேன்
என் தோழியாக ***

my angel

*** செல்வத்தின் செல்வியே
ஆண்டவன் படைப்பிலே
உன்னதம் நீயடி ........
அருகினில் வருவதால்
காவல் காப்பது
உன் முகம் நானடி ......
தேடும் காலங்கள்
உன்னால் நீண்டதோ..........
காணும் கனவுகள்
உன்னால் கணிந்ததோ.......***

kaadhal vali

விழியே விழியே
தூங்கும் விழியே
காணும் கண்ணில்
வலிகள் ஏனோ ........
அன்பை கூறி
ஆசை கொள்ளும்
உந்தன் உதட்டில்
பொய்கள் தானோ ......
உரிமைகள் இல்லா உன்னில்
உரிமையாய் வாழ நினைத்தேன்.
தவறுகள் செய்யும் மனதில்
உண்மையாய் வாழ நினைத்தேன் .
புரிந்து கொல்லடி
என்னையே நீயும் .........
காத்து கிடக்கிறேன்
ஆயுளாய் உன்னில் நானும்.
விழியே விழியே
தூங்கும் விழியே
காணும் கண்ணில்
வலிகள் ஏனோ ........
அன்பை கூறி
ஆசை கொள்ளும்
உந்தன் உதட்டில்
பொய்கள் தானோ ......
கண்மணி கண்மணி
கவிதையை வா வா ......
காவலாய் இருக்கிறேன்
உன்னையே தா தா .......
போகிறாய் போகிறாய்
நினைவினில் நீயே ........
வருகிறாய் வருகிறாய்
கனவினில் உயிரே ............
எந்தன் உயிரே ....
எந்தன் உயிரே........

amma

*** கருவறையை என் தொட்டிலாக்கி
உயிரை எனக்காக பகிர்ந்து
நேசத்தை மனமாற நல்கியவள்
என் தாய் மட்டுமே ..............
உலகில் வேறெவரும் இல்லை ***

college friendship

college guys friendship
எங்க லைப் அழகு தாண்டா
வந்து பாரு சொர்க்கம் தாண்டா
நூறு figure நாங்க பாப்போம்
sight அடிச்சி மார்க் போட்டோம்
இன்று பாத்த பொன்னு நாள தெரியவில்ல
நாள பாக்கும்பொன்னு list -இல் எங்க இல்ல
சிரிப்ப பாத்தோம் அழக பாத்தோம்
நடைய பாத்து பின்னே போனோம்
figure -இல் வளந்த எங்க friendship
மலைய போல பெருசு பாரு
மேகம் கூட எங்க நட்பில் தூசி போல
கொஞ்சம் நீயும் உரசி பாரு

natpu

*** தேடி தேடி பார்த்தேன்
காலம் கடந்து போனது .
கண்கள் மூடி விழித்தேன்
கனவு கலைந்து போனது .
நினைவுகள் பழையது
எங்கள் நட்பினில் மட்டுமே .
வந்த உறவுகள் புதியது
வாழும் வாழ்வினில் என்றுமே .
காலம் எங்கள்
மோட்சத்தை பிரித்தது .
அக்காலமும் எங்கள்
நட்பினில் தோற்றது ***

oru thalai kadhal

*** சுற்றிய எனது கனவுகள் ,
நின்றது உந்தன் முன்னால் .
பார்த்திட்ட கண்கள் இனித்தது ,
உன்னைக் கண்டதும் பின்னால் .
கண்ட கனவுகள் உனக்காக ,
இன்று மெய்த்தது நமக்காக .
ஒருதலைக்காதல் என்பது - அன்பே
இருவரும் என்றே ஆனது .
கல்லினில் பூத்த சிலையே ,
என்னை செதுக்கிய உளி நீயா ?
பூக்களின் வசிக்கும் பனியே
என்னைக் காட்டும் வெண்படம் நீயா ?
சுற்றிய எனது கனவுகள் ,
நின்றது உந்தன் முன்னால் .
பார்த்திட்ட கண்கள் இனித்தது ,
உன்னைக் கண்டதும் பின்னால் .
மேகங்கள் வடித்த தேவதையே ,
என்னை நீராய் தேக்கினாய் .
ஐநிலம் நெய்த அணிகலனே ,
அன்பில் மிளிர செய்கிறாய் .
காதலில் இணைகிறோம் இன்று ,
உதட்டில் பிறக்கும் சொல்லின்
ஒலியை போல.
நட்பை பகிர்கிறோம் என்றும் ,
சுவாசிக்கும் காற்றின் அன்பின்
வெப்பம் போலவே ***

mohan's kavithai

சக்கரம் போல சுத்தும்
2 wheel எங்க காலு .
வந்து பாத்து முட்டி மோதுற
காதல் தானே எங்க வயசு .
parttime -ல sight அடிப்போம்.
sight அடிச்சி காலம் கழிப்போம்.
கண்ணமூடி கனவு கண்டோம் .
கனவ பாத்து லைப் மறந்தோம்
எங்க age ல ,
school college first அழகு.
அடுத்து பாத்தாக்க ,
bus train ரொம்ப அழகு.
சக்கரம் போல சுத்தும்
2 wheel எங்க காலு .
வந்து பாத்து முட்டி மோதுற
காதல் தானே எங்க வயசு .
இது எங்க
ஆட்டம் போடும் வயசு .
அடக்கி பாரு
விளைவு ரொம்ப பெருசு .