*** சுற்றிய எனது கனவுகள் ,
நின்றது உந்தன் முன்னால் .
பார்த்திட்ட கண்கள் இனித்தது ,
உன்னைக் கண்டதும் பின்னால் .
கண்ட கனவுகள் உனக்காக ,
இன்று மெய்த்தது நமக்காக .
ஒருதலைக்காதல் என்பது - அன்பே
இருவரும் என்றே ஆனது .
கல்லினில் பூத்த சிலையே ,
என்னை செதுக்கிய உளி நீயா ?
பூக்களின் வசிக்கும் பனியே
என்னைக் காட்டும் வெண்படம் நீயா ?
சுற்றிய எனது கனவுகள் ,
நின்றது உந்தன் முன்னால் .
பார்த்திட்ட கண்கள் இனித்தது ,
உன்னைக் கண்டதும் பின்னால் .
மேகங்கள் வடித்த தேவதையே ,
என்னை நீராய் தேக்கினாய் .
ஐநிலம் நெய்த அணிகலனே ,
அன்பில் மிளிர செய்கிறாய் .
காதலில் இணைகிறோம் இன்று ,
உதட்டில் பிறக்கும் சொல்லின்
ஒலியை போல.
நட்பை பகிர்கிறோம் என்றும் ,
சுவாசிக்கும் காற்றின் அன்பின்
வெப்பம் போலவே ***
No comments:
Post a Comment