கல்லூரி பிரிவு
காலேஜ் என்ற புதையல்
எங்கள் வாழ்வில் பூத்த
கனவுத்தோட்டம் நண்பா ......நண்பா ......
ஒருவர் பழகி ஒருவர்
உரிமை கொள்ளும் உறவே
எங்கள் நட்பு நண்பா.....நண்பா......
கவிதைகள் ஆயிரம்
வரிக்கவிதையில் சொல்லலாம்
எங்கள் நட்பில் மட்டுமே
அன்பின் நேசம் உணரலாம்
(கவிதைகள் ஆயிரம்
வரிக்கவிதையில் சொல்லலாம்
எங்கள் நட்பில் மட்டுமே
அன்பின் நேசம் உணரலாம்)
நட்பென பூத்த பூந்தோட்டம்
அன்பில் மறவா தேரோட்டம்
என்றென கருதிய நந்தவனம்
எங்கள் கல்லூரி.
பிரிவுகள் என்பது நிரந்தரமல்ல
கனவுகள் என்பது கற்பனையல்ல
என்றென கருதிய கனவுக்காவியம்
எங்கள் கல்லூரி......
காலேஜ் என்ற புதையல்
எங்கள் வாழ்வில் பூத்த
கனவுத்தோட்டம் நண்பா ......நண்பா ......
ஒருவர் பழகி ஒருவர்
உரிமை கொள்ளும் உறவே
எங்கள் நட்பு நண்பா.....நண்பா......
வாழ்க்கையின் பாதையில்
எங்கள் கண்களை காணுவோம்...
எங்கள் நட்பை மட்டுமே
உயிரின் மேலாய் கருதுவோம் ....
(வாழ்க்கையின் பாதையில்
எங்கள் கண்களை காணுவோம்...
எங்கள் நட்பை மட்டுமே
உயிரின் மேலாய் கருதுவோம்) ....
காரணமின்றி சொல்லாது
காலம் முழுதும் பூ பூக்கும் .
விரிசல் காணும் நம் நட்பிலும்
அன்பின் அழகிருக்கும்.
பழகிய காலம் அன்பில் செதுக்கி
பிரியும் நொடிகள் நீரில் வடித்து
நிஜத்தில் மட்டும் பிரிந்து செல்வோம் தோழியே.............
No comments:
Post a Comment